சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நாடு

Report
150Shares

எகிப்தில் போலி விசா தொடர்பாக பல சுற்றுலாப்பயணிகள் சிக்குவதால் குறிப்பிட்ட இணையதளத்தில் விசா பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக அமைந்துள்ளது எகிப்து நாடு. இங்குள்ள பிரமிடுகள் மற்றும் பழங்கால கட்டிடங்களை காண பயணிகள் ஆண்டு முழுவதும் குவிந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது போலி விசா தொடர்பில் பல புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து எகிப்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக பெறப்படும் விசாவானது போலி எனவும், அதில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இரு மடங்கு கட்டணத்தில் விற்கப்படும் குறித்த நிறுவன விசாவானது எகிப்திய அரசின் அனுமதி பெறாதது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகள் எகிப்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்தாலே உரிய விசா பெற்றுக் கொள்ளலாம் எனவும்,

போலி விசாவிற்காக அதிகம் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எகிப்திய விசாவுக்கான கட்டணமானது வெறும் 18 பவுண்ட்ஸ் எனவும், எகிப்திய விமான நிலையங்களிலேயே பிரத்யேக அலுவலகங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 41 நாடுகள் எகிப்தின் eVisa-கு தகுதி உள்ளவர்கள் எனவும்,

இணையம் வாயிலாக மனு அளிக்கப்பட்ட பின்னர் உரிய நடைமுறைக்கு பின்னர் விசா இணையம் வாயிலாகவே வழங்கப்படும் எனவும் எகிப்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி Sharm el Sheikh, Dahab, Nuweiba மற்றும் Taba பகுதிகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு 15 நாட்கள் வரை இலவச அனுமதி வழங்கி வருகிறது எகிப்திய அரசாங்கம்.

15 நாட்களுக்கு மேல் தங்கும் பிரித்தானியர்கள் மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உலகின் 177 நாடுகளில் பிரித்தானியர்கள் விசா இன்றி பயணப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

5948 total views