கடலில் 46 அகதிகள் பரிதாப பலி

Report
158Shares

கடல் வழியாக சோமாலியாவில் இருந்து ஏமனுக்கு தப்பி சென்ற அகதிகள் பாதி வழியிலேயே கடலில் மூழ்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.

சோமாலிய போன்ற எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த மக்கள் வருடந்தோறும் 10000 பேர் வரை அகதிகளாக அரபு நாடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம்.

அந்த நாட்டில் குடியுரிமைக்கு விண்ணப்பித்து விட்டு கிடைத்த வேலைகளை செய்து வருவார்கள்.

சென்ற வருடம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடல் வழியாக அரபு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஏமன் நாடு அருகில் இருப்பதால் முதலில் அந்த நாட்டுக்கு செல்வதுதான் பெரும்பான்மையான அகதிகளின் தேர்வாக இருக்கும்.

இந்நிலையில் ஏமன் நாட்டிற்கு அகதிகளாக சென்றவர்களில் 46 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். உடன் பயணித்த 54 பேரின் நிலை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. அவர்களில் மேலும் 16 பேர் இறந்திருக்கலாம் எனவும் நம்பபடுகிறது.

காணாமல் போனவர்களை அமெரிக்க கடற்படையும் ஏமன் கடற்படையும் தேடி வருகின்றனர்.


5548 total views