உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் எந்த நாடு! முதலிடத்தில்?

Report
107Shares

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் உலக நாடுகளில் ஆய்வொன்றை நடத்தியது.

அதில் நாட்டின் பொருளாதார மதிப்பு, சமாதான போக்கு மற்றும் அமைதியான சமுதாயம் ஆகியவை முக்கிய காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த பட்டியலில் 2008ம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்து வரும் ஐஸ்லாந்து இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

கடந்து ஐந்து ஆண்டுகளாக அமைதியற்ற சூழல் நிலவும் சிரியா, ஆப்கன், ஈராக், தெற்கு சூடான், சோமாலியா ஆகிய நாடுகள் குறைந்த அமைதியான நாடுகளாக அதாவது கடைசி இடங்களில் உள்ளன.

சீனா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் வன்முறை அதிகரித்து வருவதாகவும், இந்தியா, இலங்கை மற்றும் உகாண்டா நாடுகளில் வன்முறை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4321 total views