தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் தீவிரம்.. இரண்டு சிறுவர்கள் மீட்பு

Report
137Shares

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள இரண்டு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் தாம் லுவாங் பகுதியில் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, உள்ளூர் பள்ளி ஒன்றின் இளம் கால்பந்து அணி வீரர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து சுற்றுலா சென்றிருந்தனர். அப்பொழுது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணாமாக 12 சிறார்களும் தனகாலத்து பயிற்சியாளருடன் இணைந்து குகைக்குள் சென்றுள்ளனர்.

ஆனால் வெள்ளம் கரைந்த பின்னரும் அவர்கள் யாரும் வெளியில் வராததால், அருகாமை பகுதியை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படியில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 9 நாட்கள் தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது கண்டறிப்பட்டது.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு நாட்டை சேர்ந்த 1000 நீச்சல் வீரர்கள் தாய்லாந்திற்கு உதவ முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் 13 சர்வதேச நீர் மூழ்கி நீச்சல் வீரர்களுடன் இணைந்து, தாய்லாந்தை சேர்ந்த 5 நீச்சல் வீரர்கள் முழுவீச்சாக சிறார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிரமமான பணிகளுக்கு இடையே தற்போது வெற்றிகரமாக இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சியாங் ராயின் சுகாதாரத் துறை தலைவர் Tossathep Boonthong கூறியுள்ளார்.

தற்போது மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5748 total views