10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான முதலை

Report
43Shares

ஒரு தசாப்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஆஸியின் வடபகுதியில் மிகப்பெரிய கடல் முதலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமையன்று Katherine பகுதியில் பொறிவைத்து இம் முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

இது அப் பகுதியில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய முதலைகளில் ஒன்றென கூறப்படுகிறது.

இப் பகுதி Nitmiluk மற்றும் Kakadu தேசியப் பூங்காக்களுக்கு மிக அருகிலுள்ள பகுதியாகும்.

இது கிட்டத்தட்ட 60 வயதுடையது என கணிக்கப்படுகிறது. இதன் நீளம் 15 அடிகள், கிட்டத்தட்ட ஒரு சராசரி காரின் நீளம், 590 கிலோ திணிவுடையது.

இதனைப் படிப்பதற்கென இரு வாரங்களுக்கு முன்னரே பொறி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் சிறிய 8 அடி நீளமான முதலையும் பிடிக்கப்பட்டிருந்தது.

1637 total views