வெளிநாட்டில் மர்மமாக இறந்து கிடந்த இளம் பெண்... பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report

பாகிஸ்தானில் இந்து மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவத்தில், பிரேதபரிசோதனையில் உண்மை தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிம்ரிதா சாந்தனி (25).

இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16-ஆம் திகதி விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கல்லூரி நிர்வாகம், நிம்ரிதா சாந்தினி துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறியது. பிரேத பரிசோதனை அறிக்கையும் இது தற்கொலை என கூறப்பட்டிருந்தது.

ஆனால் நிம்ரிதா சாந்தனி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை, இது கொலை, பொலிசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவ மாணவியின் மர்மசாவு குறித்து நீதி விசாரணை நடத்த சிந்து மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நிம்ரிதா சாந்தனியின் உடல் மீண்டும் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது நிம்ரிதா சாந்தினி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது, அதோடு மட்டுமின்றி முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் அடுத்தடுத்து தெரியவந்ததால், கொலையாளி யார் என்பதை கண்டறிய பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

18892 total views