இம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணமா ?

Report
20Shares

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மூன்றவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக பரவும் வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் 3-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு தினத்தன்று புஷ்ரா மனேகா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்ததாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இம்ரான்கானின் 3-வது திருமணத்தை பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் முப்தி சயீத் என்பவர் நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் லாகூரில் ஜனவரி 1-ந்தேதி இரவு நடைபெற்றது.

மணப்பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரது முதல் கணவர் ஒரு அரசு ஊழியர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்தகவலை பாகிஸ்தான் தெக்முக்-இ-இன்சாப் கட்சி மறுத்துள்ளது. இச்செய்தி முட்டாள் தனமானது.

இம்ரான்கான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. எனவே அவர் மீது இது போன்ற அவதூறு செய்திகளை பரப்பி விட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1283 total views