குவியல் குவியலாக குவிந்துகிடக்கும் மிதிவண்டி... என்ன நடக்கிறது சீனாவில்??

Report
329Shares

உலகில் மூன்றாவது பெரிய நாடு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாவாகும்.

சீனா நகரமான வுஹான் மற்றும் ஷியாமினில் மலைபோல் குவிந்துகிடக்கும் இந்த மிதிவண்டிகள் அதிகாரிகளால் கைபற்றபட்டவை.

எதனால் இப்படி நடக்கிறது?

சீனாவில் மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்து உபயோகித்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் நிறுத்துவிட்டு செல்லலாம். அப்படி வாடகைக்கு எடுப்பது சீனாவில் பெரியளவில் அதிகரித்துவிட்டதே இந்த குவியலுக்கான காரணம் .

ஒரு தொலைபேசி அழைப்பால் வாகனங்களை வாடகைக்கு எடுத்து நினைத்த இடத்தில் நிறுத்த முடியும். இந்த தொழிலில் பல நிறுவனங்கள் போட்டியிட்டு இறங்கியுள்ளன. இதன் விளைவாக பல இடங்களில் வாகனங்கள் குவிந்துள்ளன. எனவே இது போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

சீனாவில் மக்கள்தொகை அதிகம். போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்றுமாசின் காரணமாக இந்த மிதிவண்டி திட்டத்தை தொடங்கியது சீனா. தற்போது இதில் பல நிறுவனங்கள் போட்டியிட்டுவதால் மிதிவண்டிகள் அதிக அளவில் பயன்பாட்டில் வந்தது. இதனால் சீன அரசு மிதிவண்டிகளை பறிமுதல் செய்து இப்படி குவியலாக போட்டுள்ளது.

15216 total views