வடகொரியா விடுத்துள்ள அறிக்கை! மீண்டும் ஆரம்பமாகுமா யுத்தம்?

Report
651Shares

கொரி­யத் தீப­கற்­பத்­தில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்­காக அணு­வா­யு­தத் திட்­டங்­க­ளைக் கைவிட்டு அணு­வா­யு­தத் தளங்­களை நிர்­மூ­ல­மாக்­கு­வ­தற்கு தீர்­மா­னம் எடுத்­தி­ருந்த வட­கொ­ரியா, தற்­போது அந்த முடி­வில் இருந்து பின்­வாங்­கி யுள்­ளது.

கொரி­யத் தீப­கற்­பத்­தில் அமெ­ரிக்க, தென்­கொ­ரிய இரா­ணு­வத்­தி­னர் இணைந்து நேற்­று­முன்­தி­னம் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். கொரி­யத் தீப­கற்­பத்­தில் அமை­தியை ஏற்­ப­டுத்­தல், போர்ப் பயிற்­சியை மேற்­கொள்­ளா­தி­ருத்­தல், அணு­வா­யு­தச் சோத­னை­க­ளைத் தவிர்த்­தல் உள்­ளிட்ட பல ஒப்­பந்­தங்­கள் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்­னுக்­கும் தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜெ இன்­னுக்­கும் இடை­யில் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

எனி­னும் அமெ­ரிக்­கா­வு­டன் இணைந்து நேற்­று­முன்­தி­னம் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டது தென்கொரியா. இது கொரி­யத் தலை­வர்­க­ளி­டையே செய்­து­கொள்­ளப்­பட்­டுள்ள ஒப்­பந்­தத்­துக்கு முர­ணான செயல். இதை­ய­டுத்தே அணு­வா­யு­தத் திட்­டங்­களை முழு­மை­யா­கக் கைவிட முடி­யாது என்று அறி­வித்­தது வட­கொ­ரியா.

‘‘வட­கொ­ரியா தனது சுய பாது­காப்பை திரும்­பத்­தி­ரும்ப பரி­சீ­லித்­துப் பார்க்க வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளது. கொரி­யத் தீப­கற்­பத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள போர்ப் பயிற்சி முற்­றி­லும் தவ­றா­னது. அணு­வா­யு­தப் பாவ­னையை முழு­மை­யா­கக் கைவிட முடி­யாத சூழ­லில் வட­கொ­ரியா உள்­ளது. வட­கொ­ரியா அணு­வா­யுதத்­தைக் கைவிட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னால் ட்ரம்­பு­ட­னான பேச்­சைக் கைவி­டு­வோம்’’ என்று வட­கொ­ரியா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.ஆகையால் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21101 total views