வடகொரிய அதிபரை அமெரிக்காவுக்கு அழைக்கவிருக்கும் ட்ரம்ப்! காரணம் என்ன?

Report
27Shares

அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரிய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் யூன் 12ம் திகதி சிங்கப்பூரில் உள்ள சென் தோசா தீவில் உள்ள கேபெல்லா விடுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஜனாதிபதியுடன் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பு வட கொரியாவிற்கு ஒரு புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை பிரதிபலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1329 total views