ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கம்! நிலச்சரிவில் சிக்கி 76 பேர் உயிரிழப்பு

Report
18Shares

மேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரைக் காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்து அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

1624 total views