பரிதமாக உயிரிழந்த பெண்: பிரித்தானியாவில் இரசாயனத்தாக்குதல்

Report
56Shares

டோன் ஸ்டுர்கெஸ் மற்றும் சார்லி ரவுலி என்ற தம்பதி மீது மர்ம நபர்கள் இரசாயன தாக்குதல் நடத்தியதில் சிகிச்சை பலனின்றி பரிதமாக டோன் ஸ்டுர்கெஸ் உயிரிழந்தார்.

பிரித்தானியாவில் இரசாயனத்தாக்குதலுக்குள்ளாகிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரஸ்ய முன்னாள் உளவு அதிகாரியும் மகளுக்கும் ரசாயன விசம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் போன்று சாலிஸ்பரி நகரை அடுத்த அமேஸ்பரி கிராமத்தில் 44 வயதான டோன் ஸ்டுர்கெஸ் ( Dawn Sturgess ) மற்றும் 45 வயதான சார்லி ரவுலி (Charlie Rowley ) என்ற தம்பதி மீது இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதிருந்தது.

இது குறித்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் அவர்களுக்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் என்ற நச்சு இரசாயனப் பொருள் அவர்களின் உடலில் கலந்திருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று டோன் ஸ்டுரகெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

2076 total views