இரு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு திருமணம்:நட்பு காதலாக மாறியது

Report
57Shares

தென்னாப்பிரிக்காவின் பெண்கள் கிரிக்கெட் அனியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் இருவரும் திருமணம் செய்து கொள்ளயிருக்கின்றனர்.

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் இடையே அபூர்வமான சில ஒற்றுமைகள் உண்டு. அந்த ஒற்றுமையே அவர்களை ஒன்று சேர்த்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் திருமணம் செய்ய உள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, இதை அவர்கள் சமூகதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 2009ல் ஒரே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமாயினர். நீகெர்க் மார்ச் 8ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் எதிராக அறிமுகமானார். காப் மார்ச் 10ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். 2017ல் சிறந்த தென்னாப்பிரிக்க வீராங்கனை விருதைப் பெற்றுள்ள நீகெர்க், ஒருதினப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீராங்கனையாக உள்ளார். அவர் 95 போட்டிகளில் 125 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அந்தப் பட்டியலில் காப் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 99 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

அதேபோல் ஒருதினப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் பட்டியலில் நீகெர்க் 1770 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். 1618 ரன்களுடன் காப் ஆறாவது இடத்தில் உள்ளார். இருவரும் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

இந்தியாவு்ககு எதிராக 2014 நவம்பரில் மைசூரில் நடந்த போட்டியில் இருவரும் விளையாடினர். இவ்வாறு தென்னாப்பிரிக்க அணியின் மிகவும் முக்கியமான வீராங்கனைகளான இருவருக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக இருந்த நட்பு, காதலாகி தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதற்கான படங்களை அவர்கள் சமூகதளங்களில் வெளியிட்டுள்ளனர். நியூசிலாந்தின் ஆமி சேட்டர்த்வெயிட், லியா தகுலு கடந்த ஆண்டு திருமணம் செய்தனர். அந்த வரிசையில், நீக்ரெக், காப் ஜோடி சேர்ந்துள்ளனர்.

2582 total views