15 நாட்களுக்கு பிறகு தாய்லாந்துக் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் மீட்பு!

Report
144Shares

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கி தாவித்த 12 கால்பந்து சிறுவர்களில் 6 சிறுவர்களை 15 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10கீ.மி. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தச் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர்.மற்றும் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.

இந்நிலையில் அங்கு திடிர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாக குகை சூழந்துள்ளதால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக போதிய உணவு இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கி தாவித்து வந்தனர்.

இந்நிலையில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். பின் 15 நாட்களுக்கு பிறகு மீட்பு படையினரால் 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை நீச்சலில் திறன் படைத்த கடற்படையினரை அனுப்பி சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரலாமா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

மீட்புக் குழுவை (ரெஸ்க்யூ டீமைப் )பார்த்து – ஒருவன் கூட அழவில்லை. தைரியமாக சிரித்துக்கொண்டே கை அசைக்கிறார்கள்…

5828 total views