ஜப்பானில் நடந்த கொடூரம்: நிலச்சரிவால் உயிரிழந்த 141 பேர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காணவில்லை

Report
31Shares

ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்ப்பட்டது இதில் 141 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர்.

ஜப்பானில் தொடர்ந்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

1186 total views