தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு! சந்தோஷத்தில் உலகமக்கள்

Report
43Shares

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியிருந்த மீதமிருந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் இன்றையதினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக தாய்லாந்து கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் மா சே நகரில் 10 கி.மீ நீளமுடைய குகை ஒன்றினுள் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், உதவிப் பயிற்சியாளரும் 8 நாட்களின் பின்னர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தாய்லாந்தின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் என ஆயிரக்கணக்கானவர்கள் மீட்புப்பணியில் ஈடுபடிருந்தனர்.

அந்தவகையில் முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறுவர்களும் நேற்று நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று ஏனைய ஐந்து பேரை மீட்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் அவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த மீட்பு பணியின் போது முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1661 total views