விமானத்தில் இடைவிடாது அழுத குழந்தை! விமான ஊழியர்கள் செய்த செயலால் ஆத்திரமடைந்த பெற்றோர்

Report
266Shares

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமானத்தில் பயணித்த இந்திய தம்பதியரின் குழந்தை அழுததால் அவர்களை விமான ஊழியர்கள் கடுமையாக திட்டி கீழே இறக்கிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி பெர்னில் நகருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐஇஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

விமானம் புறப்பட்ட போது, அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது. இதனை அடுத்து விமான ஊழியர் ஒருவர், குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார். இதனால் பயந்துபோன குழந்தை, அதிகமாக கதறி அழத் தொடங்கியதாகவும் குழந்தையை தாய் சமாதானப்படுத்த மற்றுமொரு இந்திய குடும்பத்தினரும் முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி தோலிவி அடைய விமான ஊழியர், விமானத்தை தரிப்பிடத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. அங்கு இந்திய அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை கீழே இறக்கிவிட்டதுடன், அவர்களுக்கு உதவி செய்த மற்றுமொரு இந்திய குடும்பத்தினரையும் இறக்கிய பின் விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுடம் முறைப்பாட்டு மனுவை அளித்துள்ளார். அதில், விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எந்த வகையான இனப் பாகுபாட்டையும் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது எனவும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

11635 total views