காட்டு பகுதியில் திடீரென பரவிய தீ! 3000 ஏக்கர் நாசம்

Report
35Shares

லுட்ஸ்என்ட் மலைத் தொடரில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை சுமார் 3,000 ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

கடுமையான சூழ்நிலையில் தீயணைப்பு படையினர் நேற்றிலிருந்து தீயை அணைப்பதற்காக போராடி வருகின்றனர்.ஸ்பெயின் இராணுவ அவசர பிரிவினர் குறித்த பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதி ஆளில்லா கண்காணிப்பு விமானங்களின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.சுமார் 2600 பேர் தமது இருப்பிடங்களை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.

புகை மற்றும் இதர தாக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் வாலென்சியா பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.பெரும்பாலும் மின்னல் தாக்கம் காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, காண்டியா பகுதியில் 40 வீடுகள் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.600 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினரும், 31 விமானங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிகள் தொடர்கின்ற நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காண்டியாவில் உள்ள இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

894 total views