நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு : மீறினால் தடை!

Report

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் முகநூலில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை முகநூல் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் அதனை நேரலையாக முகநூலில் ஒளிபரப்பியது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேரலை வசதியை பயன்படுத்துவதில் முகநூல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

முகநூலின் விதிமுறைகளை மீறியதற்காக தடை செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட சில நாட்கள் நேரலை வசதியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

1265 total views