ஈராக்கிலுள்ள அமெரிக்க பணியாளர்களை நாடு திரும்புமாறு உத்தரவு!

Report

ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி செல்லுமாறு ஈராக்கின் அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பக்தாத் இல் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஏர்பில் இல் உள்ள இணைத்துத்தரகம் ஆகிய இரண்டு இடங்களிலும் பணிபுரியும் அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஆணையிட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக்கில் வாழும் அமெரிக்கர்களையும் அமெரிக்க நலன்விரும்பிகளையும் ஈரானும் ஈராக்கிலுள்ள அதன் ஆதரவாளர்களும் இலக்கு வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1021 total views