ஈராக்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி!

Report

ஈராக் புனிதத்தலத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்பாலா என்ற இடத்தில் அசவுரா நினைவு நிலையில் காயமடைந்த கி.பி. 680-ல் ஷிடேஷ் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசி உரிமைக்காகக் போராடி உயிர் நீத்த இமாம் ஹுசைன், நினைவிடத்தில் ஆண்டுதோறும் சடங்குகள் நடைபெறுவது வழக்கம்.

சன்னி பிரிவு இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டதில் 2004-ம் ஆண்டு 143 பேரும் 2005-ம் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 950 பேரும் இதன்போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தில் மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடியுள்ளனர்.

அவ்வாறுஓடியவர்களுள், 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்தே நடைமேடை இடிந்ததாக சடங்குக்கு ஏற்பாடு செய்த புனிதத் தலத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனினிம் , நடைமேடை இடிந்ததால் தான்கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

574 total views