பணியின்போது பயணிகளின் இதயங்களை கவர்ந்து வரும் பெண் ஓட்டுநர்..! என்ன செய்வார் தெரியுமா?

Report

ரஷ்யாவில் பணிகளுக்கிடையே இனிமையான பாடல்களை பாடி பெண் ஓட்டுநரான இல்சிடா ஹபீசோவா பயணிகளின் இதயங்களை கவர்ந்து வருகிறார்.

ரஷ்யாவின் கசான் நகரில் மின்சார டிராம் வண்டி ஓட்டுநராக பணியாற்றி வரும் 26 வயதான ஹபீசோவா, டாடர் மொழியில் பாடல்களை பாடி பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஹபீசோவாவின் பாடல்களை கேட்பதற்காகவே அவரின் டிராம் வண்டியில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

3 வயதிலிருந்தே பாடல்களை பாடி வரும் ஹபீசோவா தாயாரின் அறிவுறுத்தலின்பேரில் கடந்த இரண்டாண்டுகளாக டிராம் வண்டி ஓட்டுநராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

அத்துடன் பிரபலமான பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் சிலவற்றையும் தானே எழுதி பாடியுள்ளதாக கூறும் ஹபீசோவா, டிராம் ஓட்டும்போதும், விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பாடுவது தனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என குறிப்பிட்டுள்ளார்.

ஹபீசோவாவின் பாடலால் ஈர்க்கப்படும் பயணிகள் எந்த வேலைகளில் மூழ்கியிருந்தாலும், அவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பாடலை மெய்மறந்து கேட்க ஆரம்பித்து விடுவதாகவும்,தெரிவிகபடுகின்றது.

இதேவேளை நல்ல குரல்வளம் நிறைந்த ஹபீசோவா, பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி வருவதால், அவருக்கு கூடுதல் ஊதியம் வழங்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1276 total views