சீனாவில் பறந்து வந்த கதவு - நூலிழையில் உயிர் தப்பிய நபர்

Report

சீனாவில் கேஸ் நிறுவனம்m ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டதில் நிறுவனத்தின் கதவு ஒன்று பறந்து வந்து தாக்கியதில் அவ்வழியே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுக்ஸியாங் நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில், நீர்ம எரிவாயு சேமிப்பகம் ஒன்றில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

அப்போது அந்நிறுவனத்தின் கதவு பிய்த்துக் கொண்டு பறந்தது. அச்சமயம் அவ்வழியே இரு இருசக்கர வாகனம் கடந்த நிலையில், ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிர்திசையில் வந்த நபர் மீது கதவு தாக்கியதால் அவர் நிலைகுலைந்து இருசக்கர வாகனத்தோடு சரித்துக் கீழே விழுந்துள்ளார்.

761 total views