மல்யுத்த வீரர்களுக்கான போட்டியில் நடுவரை தாக்கியதால் நேர்ந்த வீபரிதம்!

Report

ஸ்பெயினில் இருக்கும் தீவு ஒன்றில் நடந்த மல்யுத்த வீரர்களுக்கான போட்டியின் போது, நடுவரை வீரர் ஒருவர் காலால் பலமாக தாக்கியதால், அவரின் தாடை உடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயின்Tenerife தீவில் இருக்கும் Santa Ursula-வில் மல்யுத்த வீரர்களுக்கான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் நடுவராக Angel Melian என்பவர் இருந்தார்.

இந்நிலையில் குறித்த போட்டியின் போது போட்டியாளரான Ruben Rodriguez என்பவர் சக போட்டியாளருடன் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவர் தன்னுடைய காலை மேலே வேகமாக தூக்கியதால், அவர் பின்னே இருந்த நடுவர் Angel Melian அந்த இடத்திலே சுருண்டு விழுந்தார்.

இதை நேரில் கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, உடனடியாக Angel Melian மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதில் அவரின் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை எனவும், தாடையில் பலத்த அடி என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

676 total views