சிறுத்தையை அப்படியே விழுங்க நினைத்த மலைப்பாம்பு : உயிர் பிழைக்க சண்டை போட்ட சிறுத்தை! புகைப்படம் இதோ...

Report

கென்யா நாட்டில் சிறுத்தையை மலைப்பாம்பு ஒன்று அப்படியே விழுங்க நினைத்த நிலையில், அதனிடமிருந்து உயிர் பிழைப்பதற்கு சிறுத்தை சண்டை போட்டதை வனவிலங்கு புகைப்பட கலைஞர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

கென்யாவின் Maasai Mara Triangle Reserve-ல் இருக்கும் வனவிலங்குகளை பார்ப்பதற்காக மைக் வெல்டன் என்ற 28 வயது வனவிலங்கு புகைப்பட கலைஞர் சபாரியில் சென்றுள்ளார்.

அப்போது அவர், அங்கு மலைப்பாம்பு ஒன்றுடன் சிறுத்தை சண்டை போடுவதை அப்படியே தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

முதலில் பசியில் இருந்த மலைப்பாம்பு, சிறுத்தையை அப்படியே விழுங்க நினைத்துள்ளது. ஆனால் சிறுத்தை அதிடமிருந்து தப்பிக்க போராடியது.

முதலில் தன்னுடைய காலால் பாம்பை அழுத்த, உடனடியாக பாம்பு அசுரவேகத்தில் சிறுத்தையை கடிக்க முயற்சிக்க, அதன் பின் தன்னுடைய உடலால் சிறுத்தை உடலை அப்படியே அழுத்தி பிடித்ததால், சிறுத்தை தடுமாறியதாகவும், இறுதியில் பாம்பே வென்றது போன்று இருந்ததாக மைக் வெல்டன் கூறியுள்ளார்.

ஏனெனில் பாம்பானது அதன் உடலை இறுக்கி பிடித்தவுடன் அதனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை, தன்னுடைய கமெராவின் லென்சை வைத்து இந்த புகைப்படங்கள் துல்லியமாக எடுக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

3306 total views