உயிருள்ள பாம்புகளையும் - முயல்களையும் ஆக்ரோஷமாக கடித்துக் குதறும் இராணுவ வீராங்கனைகள்!

Report

குர்திஷ் ராணுவ படையினர் பயிற்சி முடித்து பட்டம் பெறும் பட்டமளிப்பு விழாவில், வீராங்கனைகள் உயிருள்ள பாம்புகளையும், முயல்களையும் ஆக்ரோஷமாக கடித்துக் குதறும் படங்கள் வெளியாகியுள்ளன.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் பட்டம் பெற்றதும் தங்கள் தொப்பிகளை கழற்றி வீசுவது போல, Peshmerga என்னும் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த வீரர்களுக்கு இப்படி செய்வது பாரம்பரியமாம்.

2014இல் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போராடியதில் இந்த பெண்களின் பங்கு முக்கிய இடம்பெற்றதாம்.

போரின்போது இந்த பெண்களை முன் வரிசையில் நிறுத்திவிடுவார்களாம். அவர்களைப் பார்த்ததும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கலவரமடைந்துவிடுவார்களாம்.

காரணம், ஒரு பெண்ணால் கொல்லப்பட்டால், சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை நிலவுவதால்தான் அவர்கள் இந்த வீராங்கனைகளைக் கண்டால் பதறி ஓடுவார்களாம்.

10434 total views