ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

Report

ஜப்பானின் வடக்கு கடற்கரையை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கடுமையான சேதம் அல்லது காயங்கள் மற்றும் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கமும் தாக்கியுள்ள தகவல் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு தென்கிழக்கில் 62 மைல் தொலைவில் கடலோரத்தை தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை பாதிப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை எனவும், அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் நேற்று இரண்டு நிலநடுக்கங்கள் குறைந்த ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளன. முதலாவது 4.4 ரிக்டர் அளவு, இது ஹொக்கைடோவின் இபுரி பிராந்தியத்தில் தாக்கியது.

இரண்டாவது நிலநடுக்கம் ஃபுகுஷிமா பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1351 total views