ரஷ்யாவில் திடீரென கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஐவரை கொலை செய்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

Report

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் அச்சத்தில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட நபர் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஐவரை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anton Franchikov (31) என்பவர் தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பக்கத்தில் வீட்டில் Yevgeny, Kristina Tabunov என்ற தம்பதி மற்றும் மூன்று ஆண்கள் இருந்தனர்.

இதில் Kristina கர்ப்பமாக இருந்தார், அப்போது ஐவரும் சத்தம் போட்டு கத்தி கொண்டிருந்தனர் என கூறப்படுகிறது.

அந்த சத்தத்தை கேட்டு கோபமடைந்த Anton நேராக அவர்கள் வீட்டுக்கு வந்து ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ஐவர் சடலங்களையும் கைப்பற்றி விட்டு Anton-ஐ கைது செய்துள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

6668 total views