கொரோனா அச்சம்... அவசர நிலையை அறிவிக்க உள்ள ஜப்பான்!

Report

கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பான் அவசர நிலையை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளது.

ஜப்பானில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான Tokyo, Kanagawa, Saitama, Chiba, Osaka, Hyogo மற்றும் Fukuoka ஆகிய பகுதிகளில் அடிப்படை பொருளாதார செயல்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ள ஜப்பான் பிரதமர் Shinzo Abe, பொதுப்போக்குவரத்தும், பல்பொருள் அங்காடிகளும் செயல்படும் என்று அறிவித்துள்ளதோடு,

அதே நேரத்தில் மக்கள் சமூக விலகலை பின்பற்றுமாறும் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று முறைப்படி பத்திரிகையாளர்கள் மாநாடு ஒன்றில் அறிவிக்கப்பட உள்ள அவசர நிலை, உத்தேசமாக ஒரு மாதமாவது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று 252 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஏழு பேர் உயிரிழந்த நிலையில் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளது.

மொத்தத்தில் ஜப்பானில் 4,600 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்யாததற்காக ஜப்பான் பிரதமர் Abe ஏற்கனவே விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

1592 total views