கிம் ஜாங் தொடர்பில் முதன் முறையாக மனம் திறந்த அவரது நண்பர்!

Report

அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரரும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உடன் நெருக்கமான நட்பு ஏற்படுத்திக் கொண்டவருமான டென்னிஸ் ராட்மன் தற்போது முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

வடகொரியாவில் இருந்து வெளிவரும் தகவல்கள் தமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், ஆட்சி அதிகாரத்தை கிம் யோ கைப்பற்றும் நிலை இருப்பதாகவும் அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரரான டென்னிஸ் ராட்மன் தெரிவித்துள்ளார்.

59 வயதான டென்னிஸ் ராட்மன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

2013 ஆம் ஆண்டு கிம் ஜாங் வுன் அழைப்பை ஏற்று வடகொரியாவுக்கு சென்றவர் டென்னிஸ் ராட்மன்.

கடந்த மாதம் சுமார் 20 நாட்கள் கிம் ஜாங் திடீரென்று மாயமான நிலையில், அவரது உடல் நிலை தொடர்பில் வதந்திகள் பரவியது.

தொடர்ந்து கிம் ஜாங் இறந்துவிட்டதாகவும், அல்லது அவரால் இனி எழுந்து நடமாட முடியாத சூழலில் உள்ளார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென்று கிம் ஜாங் வுன் பொதுவெளியில் தென்பட்டதுடன், அவரது சகோதரியுடன் இணைந்து உர ஆலை ஒன்றியும் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், கிம் ஜாங் வுன் மீது மரியாதை வைத்துள்ள அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் டென்னிஸ் ராட்மன், தமக்கு தெரிந்த தகவல்களை முதன் முறையாக மனந்திறந்துள்ளார்.

சமீப நாட்களாக கிம் யோ வடகொரிய ஊடகங்களில் அதிகமாக தென்படுகிறார் என்றால், கண்டிப்பாக ஏதோ தவறான நிகழ்வு வடகொரியாவில் நடந்துள்ளது என்றார் ராட்மன்.

தென் கொரியாவுக்கு கிம் குடும்பத்தில் இருந்து முதன் முறையாக சென்றவர் கிம் யோ என்பதை மறந்துவிட முடியாது என கூறும் ராட்மன்,

அதன் பின்னரே கிம் ஜாங் வுன் தென் கொரியா சென்று வந்தார் என்கிறார். கிம் ஜாங் தொடர்பில் அறுதியிட்டு எந்த தகவலையும் தாம் கூற விரும்பவில்லை என கூஉம் ராட்மன்,

கிம் யோ தற்போது ஆட்சியை கவனிக்கிறார் என்றால், வடகொரியாவொன் அடுத்த தலைவராக அவர் மிக விரைவில் பொறுப்பேற்கலாம் என்றார்.

5658 total views