கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற பிரபல தொழிலதிபர்! எதற்கு தெரியுமா? பரபரப்பை கிளப்பிய சம்பவம்

Report

ஜிம்பாப்வேயில் கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற வழக்கில் சீனாவை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேயில் அதிக முதலீடு செய்துள்ள நாடு சீனா, சுரங்கங்களில் இருந்து குரோமியம், இரும்பு, நிலக்கரி போன்றவற்றை வெட்டி எடுப்பதில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்காக 10,000 அதிகமான சீனர்களும் அங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிறன்று காலை Gweru மாகாணத்தில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் பணிபுரியும் கருப்பினத்தவரை சுட்டுக் கொன்றதாக சீனாவை சேர்ந்த Zhang Xuen கைது செய்யப்பட்டுள்ளார்.

Tachiona என்பவர் தன்னுடைய சம்பளத்தை வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் Zhang சுட்டதாக தெரிகிறது.

வலது பக்க தொடை யில் மூன்று முறையும், இடது பக்க தொடையில் இரண்டு முறையும் என மொத்தமாக ஐந்து தடவை சுட்டுள்ளார்.

மற்றொருவருக்கு கன்னத்தில் சுட்டுள்ளார் எனவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் பொலிசார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதனையடுத்து திட்டமிட்ட கொலை என்ற வழக்கில் Zhang-யை கைது செய்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, சீனா நிறுவனங்களுக்கு எதிராக மக்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பை வழங்குவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1364 total views