பிரபல பாடகர் ஒருவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி உப்பு தூவி பாதுகாத்த மனைவி: அவர் சொன்ன காரணம்

Report

ரஷ்யாவில் பிரபல பாடகர் ஒருவரின் குடியிருப்பில் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அவரது உடல் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குறித்த பாடகரின் இளம் மனைவியே, தமது கணவரை துண்டு துண்டாக வெட்டி, உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தி அதை உப்பு தூவி பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.

தமது கணவர், 30 வயதான ஆண்டி கார்ட்ரைட் அதிக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் திடீரென்று மரணமடைந்ததாகவும்,

அவர் ஒரு இழிவான மரணம் அடைந்தார் என்று அவரது ரசிகர்கள் தெரிந்து கொள்ள அவள் விரும்பவில்லை என்பதாலையே அவ்வாறு உடலை வெட்டி துண்டாக்கியதாக விசாரணை அதிகாரிகளிடம் கைதான மெரினா குகால் தெரிவித்துள்ளார்.

மேலும் கணவரின் உடலை துண்டு துண்டாக்க தமக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது எனவும், பின்னர் பைகளில் நிரப்பி தங்களது ப்ரீசரில் பாதுகாத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாடகரின் மரணம் குறித்து கொலை விசாரணையைத் முன்னெடுக்க உள்ளதாக ரஷ்ய பொலிசார் கூறுகின்றனர்,

மேலும் மரணமடைந்த பாடகரின் உண்மையான பெயர் அலெக்சாண்டர் யுஷ்கோ எனவும் அவர் உக்ரைன் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், உடல் பாகங்களை மிக நேர்த்தியாக துண்டாக்கப்பட்டுள்ளதும், உள்ளுறுப்புகளை வெட்டி சுத்தப்படுத்தி, உப்பு தூவி பத்திரப்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.

பின்னாளில் உணவுக்காக இந்த உறுப்புகளை பத்திரப்படுத்தினாரா என்பது மேலதிக விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, குடியிருப்பில் எவ்வித அடையாளமும் இன்றி சுத்தப்படுத்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாடகரின் நெருங்கிய நண்பர்கள் சிலர், இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுப்பியதுடன், அவருக்கு மது பழக்கம் மட்டுமே உள்ளதாகவும், போதை மருந்து எடுத்துக் கொள்பவர் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கைதான பெண்ணின் தாயாரும் உதவி இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அவர் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் கைதான பெண்மணியே, பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். அதன் பின்னரே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது அவர் கூறுவது உண்மையா என கண்டறிய உரிய சோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

1481 total views