மாஸ்குகளை இப்படி பயன்படுத்துங்கள்: மீண்டும் வலியுறுத்திய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

Report

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பயன்படுத்திவரும் மாஸ்குகளை பெட்ரோல் விட்டு சுத்தப்படுத்தலாம் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடேர்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரமும் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடேர்ட் இதே கருத்தை முன்வைத்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பு உடனடியாக அவரை திருத்தியதால், அது வெறும் கேலிக்கான கருத்து என்றார்.

துணியாலான மாஸ்குகளை சாதாரணமாக கழுவ வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை மாஸ்குகளை பயன்படுத்தப்பட்ட பின் மாற்றப்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ஆனால் வெள்ளிக்கிழமை தாம் ஏற்கனவே கூறிய கருத்தானது விளையாட்டல்ல என கூறிய ஜனாதிபதி டியுடேர்ட், பெட்ரோல் நிலையம் செல்லுங்கள் என்றார்.

இதனிடையே, பெட்ரோல் பயன்படுத்தில் மாஸ்குகளை கிருமி நீக்கம் செய்ய முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை;

அதனுடன் நீண்டகால தொடர்பு வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த ஜனாதிபதி டியுடேர்ட், நான் அறிவிலியாக இருந்தால் ஜனாதிபதி பொறுக்கு வந்திருக்க முடியாது.

நான் கூறியதில் எந்த தவறும் இல்லை, கிருமி நீக்கம் செய்ய ஆல்கஹால் கிடைக்கவில்லை என்றால், குறிப்பாக ஏழைகளுக்கு, ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று, கிருமி நீக்கம் செய்ய பெட்ரோலை பயன்படுத்துங்கள் என்றார் ஜனாதிபதி டியுடேர்ட்.

இருப்பினும் ஜனாதிபதியின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது விளக்கத்தையும் எவரும் கருத்தில் கொள்ளவில்லை.

930 total views