திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் செலுத்தியது உறுதி!

Report

ரஷ்ய எதிர்கட்சி தலைவரான, அலெக்சி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மைதான் என ஜெர்மனி ராணுவ பரிசோதனை கூடம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ரஷ்ய எதிர்கட்சி தலைவரான, அலெக்சி நவல்னி, கடந்த மாதம், 20ல், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, விஷம் வைக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு வாரம் கோமா நிலையில் இருந்த அலெக்சி, தற்போது குணமடைந்து வருவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் தற்போது தானாக சுவாசிக்க முடிகிறது. சுவாசக்கருவிகள் ஏதும் தேவையில்லை என மருத்துவர்கள் கூறினர்

இது குறித்து, ஜெர்மனி ராணுவ பரிசோதனை கூடம், ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில், அலக்சி நவல்னிக்கு, ரஷ்ய தயாரிப்பான, ‛நோவிசாக்' எனப்படும், விஷம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

விஷம் செலுத்தப்பட்டதால் அவருடைய ஆரோக்கியம் பலநாட்களுக்கு பாதிக்கப்படக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும், பரிசோதனை மேற்கொண்டன. பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளும் அவருக்கு விஷம் செலுத்தப்பட்டதை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.

ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் இருவரும் ஜெர்மனி, மற்றும் பிரான்ஸ் நாட்டு குற்றச்சாட்டுகளையும் லேப் முடிவுகளையும் மறுத்து வருகின்றனர்.

1646 total views