சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நவம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு!

Report

சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என, சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் சுமார் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கு அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

'கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டது' என, சீனாவைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி மெங் சமீபத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீன நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றில் குறைந்தது மூன்று தடுப்பூசிகள், ஏற்கெனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகாலப் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலில் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நவ., மாதம் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1006 total views