லோ கட் உடை அணிந்ததால் பிரதமருக்கு எதிர்ப்பு; வாயடைக்க வைத்த பெண்கள்

Report

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரீன்( 34) லோ கட் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டமை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இணையதளத்தில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்னா மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என ஆட்சேபம் தெரிவித்தவர்கள், இதனால் வாயடைத்துப் போயினர்.

பெண்கள் உரிமை ஆர்வலரும் பின்லாந்தின் மைய இடது சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மரீன் சமீபத்தில் ட்ரெண்டி பத்திரிகையின் அட்டைப்படத்தில் தோன்றினார்,

அதில் அவர் லோ கட் ஆடை மற்றும் அழகான நெக்லஸ் அணிந்து போஸ் கொடுத்தார்.

இதனையடுத்து "பிரதமரின் பங்கு ஒரு தலைவராக செயல்படுவதே தவிர பேஷன் மாடலாக அல்ல" என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்ற போட்டோஷூட்களில் ஈடுபடுவதன் மூலம், சர்வதேச அரசியலிலும் பொதுமக்களிலும் மரின் தனது சொந்த உருவத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்த கருத்துக்கள் பின்லாந்தில் பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து அவர்களில் பலர் பிரதமர் மரீனுக்கு தங்கள் ஆதர்வை காட்ட, பல பெண்கள் இப்போது சட்டைகள் அல்லது பிளவுசுகள் இல்லாமல் லோ கட் ஆடைகளை அணிந்த படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

1221 total views