ஆர்மீனிய படைகளின் ஷெல் தாக்குதல் ; 12 பேர் பலி

Report

அசர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான காஞ்சா மீது இன்று அதிகாலை ஆர்மீனிய படைகளினால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சாவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக அசெரி பிரதி வழக்குத்தொடுநர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் ஆர்மீனியா இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறது.

இந்த தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அசர்பைஜான் ஜனாதிபதியின் உதவியாளர் ஹிக்மெட் ஹஜியேவ் ல் தெரிவித்துள்ளார்.

அசர்பைஜான் சுரங்க நடவடிக்கைக்கான தேசிய நிறுவனத்தின் (அனாமா) கருத்துப்படி, கஞ்சா மீது வீசப்பட்ட ஏவுகணைகள் ஆரம்பத்தில் SCUD / எல்ப்ரஸ் செயல்பாட்டு-தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என அடையாளப்படுத்தப்பட்டது.

592 total views