முதலாவது கொரோனா தொற்றாளரை பதிவு செய்த நாடு

Report

பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியே நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் துய்லீபா, பொதுமக்கள் அனைவரும் அச்சமடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

எனினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளும்படியும், தொடர்ந்து கண்காணிப்புடன் இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் நியூசிலாந்து நாட்டில் இருந்து விமானம் வழியே வந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் துய்லீபா செய்லிலே மலியெலிகாவோய் தெரிவித்து உள்ளார்.

அந்நபர் வந்தபின் 4 நாட்கள் கழித்து பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. ஆனால், இரண்டாவது பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இதுபற்றி அமைச்சரவை கூடி நடப்பு நடைமுறைகளில் மாற்றங்கள் செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

2724 total views