ஆபத்தான கட்டத்தில் இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்! வெளியான தகவல்

Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பார்கின்சன் (Parkinson's disease) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதன் முறையாக அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் வலேரி சோலோவி என்பவரே அம்பலப்படுத்தினார்.

அவரே தற்போது இன்னொரு முக்கியமான தகவலையும் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி புடின் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கு முன்னர் ஜனவரியில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமக்கு கிடைத்துள்ள இந்த தகவல்கள் உறுதியானவை எனவும், இருப்பினும் இந்த விவகாரங்களை வெளிப்படுத்த தமக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார்கின்சன் நோயானது ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எனக் கூற முடியாது எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் வலேரி, நரம்பியல் மண்டலத்தை பாதித்துள்ள இந்த நோயால் புடின் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை குறைத்துக்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், புற்றுநோய் விவகாரம் அப்படியல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், புடின் ஜனாதிபதி பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளதாகவும், ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது முடிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தையும் ரஷ்ய அதிகாரிகள் தரப்பும் ஜனாதிபதி அலுவலகமும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4307 total views