ஆப்கான் தலைநகரில் கொடூர தாக்குதல்! 8 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

Report

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இன்று காலையில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

காபூல் நகரின் பல்வேறு இடங்களில் 23 ரொக்கெட்டுகள் வீசப்பட்டத்தில் பொதுமக்கள் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காபூல், சஹார் காலா, போக்குவரத்து சுற்றுவட்டம், பி.டி4 இல் குல்-இ-சுர்க் சுற்றுவட்டம், செடரத் சுற்றுவட்டம், நகரின் மையத்தில் உள்ள ஸ்பின்சார் வீதி, பி.டி 2 இல் தேசிய காப்பக சாலைக்கு அருகில், மற்றும் லைசீ மரியம் சந்தை மற்றும் காபூலின் வடக்கே உள்ள பஞ்சாத் குடும்ப பகுதிகளில் ரொக்கெட்டுகள் தரையிறங்கியதாக ஆப்கானிஸ்தானின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் காபூலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அண்மையில், பரியாபில் மாகாணத்தில் கராம்குல் மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி உட்பட குறைந்தது 5 பாதுகாப்புப் படையினர் விதியோர குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

353 total views