பெண்கள் இராணுவத்தில் சேரலாம்: சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

Report
0Shares

சவுதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

37 வயதான இளவரசர் முகம்மது பின் சல்மான் சவுதியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். இதற்காக ‘விஷன்-2030’ என்ற திட்டத்தை பிரகடனப்படுத்தினார்.

இதன் ஒருபகுதியாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கபட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த 26 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பெண்கள் வாகன ஓட்ட தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 2018-ம் ஆண்டு சவுதி அரசு நீக்கி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்தது.

தொடர்ச்சியாக கால்பந்து போட்டிகளை பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது நீக்கப்பட்டது. மேலும், வரவாற்றிலேயே முதல்முறையாக சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி அரேபியா நியமனம் செய்தது.

இதனை போன்று தொடர்ச்சியாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு முன்னர், கடந்த ஆண்டு, நீதி அமைச்சரும் 100 பெண்களை பொது நோட்டரிகளாக நியமித்திருந்தார். ஜனவரி மாதத்தில், ச் விரைவில் பெண்களை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கத் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சவுதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி, சவுதி பெண்கள் சவுதி அரேபிய இராணுவம், ராயல் சவுதி வான் பாதுகாப்பு, ராயல் சவுதி கடற்படை, ராயல் சவுதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்கள் ராணுவத்தில் பணியாற்ற பெண்ணின் வயது 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் உயரம் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

மேலும், வேலையில் சேர விரும்பும் பெண் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றிருக்க வேண்டும், சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்க கூடாது.

திருமணம் முடிக்காதவர் ராணுவத்தில் சேர்ந்தால் சவுதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

137 total views