தான் கருவுற்ற செய்தியை வித்தியாசமாக கணவரிடம் தெரிவித்த டிக்டாக் பிரபலமான பெண்!

Report
0Shares

அமெரிக்காவில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தான் கருவுற்ற செய்தியை லாட்டரி சீட்டு மூலம் கணவரிடம் வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த பெண் ஹைலிபேஸ் ‘டிக்டாக்’ மூலம் பிரபலம் ஆனவர்.

இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் கருவுற்றுள்ளார். இந்த தகவலை ஹைலி தனது கணவரிடம் தெரிவிக்க வினோத முறையை பின்பற்றினார்.

அதற்கு தனது கணவரின் மகிழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை அறிய கருவுற்ற தகவலை வீடியோவாக பதிவு செய்தார். இதை ‘யூடியூப்’ மற்றும் ‘டிக்டாக்’ பக்கத்தில் பகிர்ந்தார். இது இணையதளத்தில் வைரல் ஆனது.

இந்த காணொளி 6 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் தான் கருவுற்ற செய்தியை தனது கணவர் நிக்கிடம் இன்ப அதிர்ச்சியாக தெரிவிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு அவர் ஒரு அட்டையில் லாட்டரியை பயன்படுத்தி இருக்கிறார். அந்த லாட்டரி சீட்டை தனது கணவரிடம் கொடுத்து அதில் என்ன பரிசு கிடைத்து இருக்கிறது என்பதை பார்க்கச் சொல்கிறார்.

அதன்படி அவரது கணவர் அந்த லாட்டரி சீட்டை சுரண்டி பார்க்கிறார். அதில் ‘பேபி’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து குழம்பினார்.

தொடர்ந்து புன்னகை செய்யும் மனைவியை கண்டு உண்மையை புரிந்து கொள்ளும் அவரது கணவர் ஆனந்த குரல் எழுப்பி தனது கருவுற்ற மனைவியை கட்டித் தழுவி தூக்குகிறார்.

இந்த வீடியோவை யூடியூப்பில் 70 ஆயிரம் பேரும், டிக்டாக்கில் கோடிக்கணக்கானோரும் பார்த்துள்ளனர்.

153 total views