100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!!

Report
8Shares

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ ஆந்திர மாநிலம் , ஸ்ரீஹரிகோட்டாவில்இருந்து வரும் 12-ந் தேதி தனது 100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.

இதோடு மேலும், 30 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.

பெங்களூருவில் அஸ்ட்ரோசாட் எனும் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் இஸ்ரோ இயக்குநர் எம். அண்ணா துரை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இடையே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

100-வது செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ வரும் 12-ந்தேதி தனது 100-வது செயற்கைக்கோளை ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் செலுத்துகிறது. இந்த செயற்கைக்கோளுடன், மேலும், 30 செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.

வானிலை தகவல்கள்

இந்தியாவின் முதல் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்விக்கு பின்பே எழுச்சி பெற்று 100-வது செயற்கைக்கோள் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 12-ந்தேதி செலுத்தப்படும் 31 செயற்கைக்கோள்களில் வானிலை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கார்டோசாட்-2 செயற்கைகளும் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பி.எஸ்.எல்.வி.-சி40ராக்ெகட் மூலம் செலுத்தப்படுகிறது.

கார்டோசாட் சீரீஸ்

இதில் 28 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை, 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. கடந்த செயற்கைக்கோள் சிறப்பாக விண்ணில் செலுத்தப்பட்டு இருந்தால், அது 100-வது செயற்கைக்கோளாக இருந்திருக்கும்.

12-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்ெகட்டில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட் -2 சீரிஸ் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. இது நிலப்பரப்பு கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும். கார்டோசாட் சீரிஸ் வகையில் இது 3-வது செயற்கைக்கோளாகும்.

1,313 கிலோ

மற்ற 30 செயற்கைக்கோளின் எடை ஒட்டுமொத்தமாக 613 கிலோ ஆகும். ஒட்டுமொத்தமாக அனைத்து செயற்கைக்கோள்களும் 1,313 கிலோ எடை கொண்டவையாகும்.

6 நாடுகள்

இந்த 28 செயற்கைக்கோள்களில் 3 மைக்ரோ செயற்கைக்கோள்களும், 25 நானோ செயற்கைகோள்களும் அடங்கும். இந்த 25 செயற்கைக்கோள்களும் கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி39 ராக்கெட் தொழில்நுட்ப காரணங்களால் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டில் இருந்த வெப்ப தடுப்பு பகுதி கடைசி நேரத்தில் பிரியவில்லை. இதனால், ராக்கெட்டின் கடைசி பகுதி சிக்கிவிட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1084 total views