செவ்வாயில் கால் பதிக்கவுள்ள முதல் பெண்மணி! நாசா முயற்சி

Report

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு முதல் முதலில் மனிதர்களை அனுப்பயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் வானொலி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாடும் போதே அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அந்த முதல் மனிதர் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைப்பதற்கு நாசா முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இவ்இருபெண்களில் ஒருவர்தான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.

2644 total views