14 அடி நீளமான ஆமையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

Report

உலகில் வாழ்ந்த கார் அளவிலான ஆமையொன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆமையின் நீளம் 4 மீற்றர்கள் (14 அடி) ஆகும். இது சுமார் 1.25 தொன் எடையைக் கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது

இந்த ஆமையின் 9.4 அடி (2.86 மீற்றர்) நீளமான ஓடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 70 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பிராந்திய ஏரிகள், ஆறுகளில் இந்த இன ஆமைகள் வசித்ததாக எ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆமை இனத்தின் படிமங்கள் 1970களில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்த உயிரினம் குறித்த பல விபரங்கள் இதுவரை மர்மமாக இருந்து வருகின்றது.

1304 total views