மகா சிவராத்தியான பாவங்களை தீர்க்க அந்தந்த ராசிகாரர்கள் செய்யவேண்டிய பரிகாரம்...

Report

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு மணிக்கு முன்னும் பின்னும் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) சதுர்த்தசி திதி இருக்கும் நாள் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.

இன்று சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அபிஷேகத்திற்கு வாங்கித் தரவேண்டிய பொருட்களை பார்க்கலாம்.

வீரத்திற்கு அதிபதியான செவ்வாயை ராசி நாதனாகக் கொண்டமேஷ ராசிக்காரர்கள் வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். நினைத்த காரியம் நடக்கும்.

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் வெண்மையான தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் சில லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

சந்திரனை அதிபதியாக் கொண்ட கடக ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் பசும் பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் இன்று சிவனை அபிஷேகம் செய்யலாம்

குருபகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்

8059 total views