இலங்­கை­யில் இன்­னும் சித்­தி­ர­வ­தை­கள் வெளியான புதிய ஆதாரம்

Report
332Shares

போர் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­க­ளுக்­குப் பின்­ன­ரும், தமி­ழர்­கள் தாக்கிச் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­வ­தும், வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தும் தொடர்­வ­தாக, அசோ­சி­யேட்­டட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

ஐரோப்­பா­வில் அர­சி­யல் தஞ்­சம் கோரி­யுள்ள 50 க்கும் அதி­க­மான இலங்­கைத் தமிழ் ஆண்­கள் தாம் தற்­போ­தைய அர­சின் காலத்­தில் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது தொடர்­பான விவரங்­களை அசோ­சி­யேட்­டட் பிர­சி­டம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

அவர்­க­ளின் மார்பு, இடுப்பு, கால்­க­ளில் வடுக்­கள் காணப்­பட்­டன. அசோ­சி­யேட்­டட் பிரஸ், 32பேரை மருத்­துவ மற்­றும் உள­வி­யல் மதிப்­பீ­டு­களை ஆய்வு செய்­த­து­டன், 20 பேரை நேர்­கா­ணல் செய்­தது.உள்­நாட்­டுப் போரில் தோல்­வி­ய­டைந்த தரப்­பில் ஒரு போரா­ளிக் குழுவை மீண்­டும் உரு­வாக்க முயற்­சிப்­ப­தாக தம்­மீது குற்­றஞ்சாட்­டப்­பட்­ட­ தாக அவர்­கள் கூறி­னர்.

8 ஆண்­டு­க­ளுக்கு முன் போர் முடி­வுக்கு வந்த போதி­லும், 2016ஆம் ஆண்டு தொடக்­கத்­தில் இருந்து இந்த ஆண்­டின் ஜூலை வரை சித்­தி­ர­வ­தை­ க­ளும் மீறல்­க­ளும் இடம்­பெற்­றுள்­ளன. இலங்கை அதி­கா­ரி­கள் இந்­தக் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­த­னர்.

கடந்த 40 ஆண்­டு­க­ளாக உல­கில் மோச­மான நாடு­க­ளில் சித்­தி­ர­வ­தை­க­ளில் இருந்து தப்பி வந்­த­வர்­களை நேர்­கா­ணல் செய்த பியர்ஸ் பிகோ என்ற தென்­னா­பி­ரிக்க மனித உரி­மை­கள் விசா­ர­ணை­யா­ளர், தாம் இதற்கு முன்­னர் கேள்­விப்­பட்­டி­ராத மிரு­கத்­த­ன­மான சித்­தி­ர­வ­தை­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

11210 total views