பயிற்சியாளர் இல்லாமல் பயிற்சி: இலங்கை அணி சாதிக்குமா?

Report
7Shares

பயிற்சியாளர் இல்லாமல் இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இன்று கொல்கத்தாவில் தமது பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர அறிவிக்கப்பட்டுள்ள போதும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனால், ஆறு வாரங்களுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் அணி, பயிற்சியாளர் இல்லாமல் தனது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இருப்பினும், திலான் சமரவீர பயிற்சியாளராக எதிர்வரும் போட்டிகளில் இணைந்துக்கொள்வார் என கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய சென்றுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் 3 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1273 total views