பெண் வேடமணிந்து சிக்கிய ஆண்கள்

Report
155Shares

மணப்பாறை அருகே பெண் வேடமணிந்து நெடுஞ்சாலையில் கத்தி முனையில் ரூ.37 ஆயிரம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரலிங்கம் என்பவர் லாரி ஒன்றை ஓட்டி சென்றுள்ளார்.

அப்பொழுது, சாலையின் ஓரத்தில் பெண் வேடமிட்டு நின்று கொண்டிருந்த ஒருவர் சுந்தரலிங்கத்தை மயக்கி, கட்டிப்போட்டு கத்தி முனையில் ரூ.37ஆயிரத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் திருச்சி குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இருந்த தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி அம்மாபேட்டையை சேர்ந்த ஏகாந்தம் மகன்கள் அறிவழகன்(31), மகேஷ் (எ) மகேந்திரன்(26) மற்றும் கண்டியூர் காந்திநகரை சேர்ந்த முனியாண்டி மகன் அருணாசலம்(20) ஆகிய மூன்று நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மணப்பாறையில் நடந்த நெடுஞ்சாலை வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என தெரிவந்தது.

அதனையடுத்து அவர்களை மணப்பாறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

4974 total views