உடைப்பெடுத்த மன்னாகண்டல் குளம் புனரமைப்பு துரித கதியில்...

Report
26Shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் குளம் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 06.11.2017 அன்று குறித்த குளம் உடைப்பெடுத்திருந்தது.

இந்நிலையில் உடனடியாகவே குளத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் துரிதகதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை இந்த குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக குளத்தின் கீழுள்ள குறித்தளவு வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதோடு நீரும் வீண் விரயாமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1201 total views